சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறை

அன்புடையீர்,

வணக்கம். கல்வியாண்டு 2019-2020 முதல், நமது பள்ளியில் சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறையில் கற்க உதவுமாறு இணையதளத்தினை மாற்றியமைத்துள்ளோம். இதில் சேர்ந்து படிக்க முன்பதிவு செய்தல் அவசியம். முன்பதிவு செய்த மாணவ/மாணவிகள் மட்டுமே தமிழ்த் திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு சேர்ந்த வகுப்பில் 25 பாடங்களையும் படித்து முடித்தவர்களே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

நமது கல்வியாண்டு ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் துவங்கும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மாணவ/மாணவிகள் தாங்கள் பங்கேற்கும் வகுப்பில் பதிவு செய்தல் அவசியம். பதிவு/தேர்விற்கான கட்டணம் ஆண்டிற்கு $9.99.

பதிவு செய்த மாணவர்கள் நமது இணைய தளத்தில் அவர்களுக்குக் கொடுத்த கால அட்டவணைப்படி (Class Schedule) பாடங்களைப் படிக்க வேண்டும்.

  • ஒளிப்படப் பாடங்கள்: மாணவ/மாணவிகள் கால அட்டவணைப்படி ஒளிப்படங்களைக் காண வேண்டும்.
  • வினாடி-வினா: ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தபின் அந்தப்பாடத்திற்கான வினாடி-வினாவில் பங்கேற்க வேண்டும். உங்களுடைய வினாடி-வினா மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டு இறுதித் தேர்வில் சேர்க்கப்படும்.
  • க்விஸ்லெட் பயிற்சி: ஒவ்வொரு பாடத்திற்கான பயிற்சிகள் க்விஸ்லெட் தளத்தில் (www.quizlet.com) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்து “Grade-xx:Ilearntamilnow.com” என்ற வகுப்பறைத் தேடிப் பதிவு செய்து கொள்ளவும். இதற்குத் தனியாகக் கட்டணம் கிடையாது.
  • புத்தகங்கள்: பதிவு செய்த மாணவ/மாணவிகள் பாடப் புத்தகங்களை நமது இணையதளத்திலேயே படிக்க முடியும். அவர்கள் விருப்பப்பட்டால் பாடப் புத்தகங்களை நமது மின்னங்காடியில்(eShop) வாங்கியும் படிக்கலாம்.  புத்தக விற்பனையில் வரும் தொகை நமது பள்ளியின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும்.
  • குழுமங்கள்: நீங்கள் படிக்கும் பாடத்தில் சந்தேகமிருந்தால் உங்கள் வகுப்பு ஆசிரியரை நேரடியாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் வகுப்பிற்கான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலாம்.
  • ஸ்கைப் வகுப்புக்கள்: நேரடியாக ஆசிரியரின் வாய்மொழியாகக் கற்க விரும்புபவர்கள் நமது பள்ளியின் ஸ்கைப் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு நேரம் பெற்று அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். இந்தச் சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.
  • எண்ணியல் பட்டயங்கள்: உங்கள் வகுப்பு ஆசிரியர்கள் உங்களைச் சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பார்கள். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எண்ணியல் பட்டயங்களைப் (Digital Badges) பெறலாம்.
  • அளவு முறை:  நமது இணையதளத்தில் “My profile” பகுதியில் நீங்கள் படிக்கும் முறையின் அளவுகள் பகிரப்படும்.
  • சான்றிதழ்: பதிவுசெய்து அந்த வகுப்பிற்கான ஒளிப்படங்கள் அனைத்தையும் பார்த்து, பாடங்களைப் படித்து, அனைத்து வினாடி வினாக்களிலும் பங்கேற்கும் மாணவ/ மாணவிகளுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
  • பரிசுகள்: குழந்தைகளுக்கு, தமிழ்ப் படிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழ்!!! வெல்க தமிழ்!!!

குவிஸ்லெட் (Quizlet.com) என்ற ஊடாடும் மென்பொருளில் தமிழ்

தமிழ் படிப்பதை எளிதாக்கவும், தமிழ்ப் படிக்கும் குழந்தைகளை உற்சாகப் படுத்தும் வகையிலும், இந்த ஆண்டு முதல் நமது பள்ளியின் பாடப் பயிற்சிகளைக்  குவிஸ்லெட் (quizlet) என்ற ஊடாடும் மென்பொருளில் (interative software) உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு வகுப்பிற்கான குவிஸ்லெட் உரலி இணைப்புக்களை நமது பள்ளியின் இணையதளத்தில் வெளியிடுள்ளோம். அதில் சொடுக்கி உங்களை உங்கள் வகுப்புடன் இணைத்துக் கொள்ளுங்கள். ‘குவிஸ்லெட்-ன் ஆப்’ உங்கள் தொலைபேசியிலோ ஐ-பேடிலோ தளவிரக்கம் செய்வதின் மூலம் நீங்கள் தமிழை ‘எங்கேயும் படிக்கலாம், எதிலும் படிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்’. குவிஸ்லெட்டில் தமிழில் விளையாடவும் செய்யலாம்.

Quizlet-01

அதேபோல், உங்கள் வகுப்பிற்கான புத்தகங்களை நமது மின்னங்காடியில் வாங்கத் தவறாதீர்கள். புத்தகங்கள் விற்பதனால் கிடைக்கும் வருமானம் நமது பள்ளியின் மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படும். ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் பள்ளி துவங்குகிறது, பாடங்கள் தயார், பயிற்சிகள் தயார், விளையாட்டுகள் தயார்…வாருங்கள் படிக்கலாம்.

வகுப்பு

(Grade)

யூ-ட்யூப்

இணைப்பு

(Youtube link)

முகநூல் குழுமம்

இணைப்பு

(Facebook link)

குவிஸ்லெட்

இணைப்பு

(Quizlet link)

வகுப்பு-01 (Grade-01) நிலை-01-இணைப்பு நிலை-01-குழுமம் நிலை-01-பயிற்சி
வகுப்பு-02 (Grade-02) நிலை-02-இணைப்பு நிலை-02-குழுமம் நிலை-02-பயிற்சி
வகுப்பு-03 (Grade-03) நிலை-03-இணைப்பு நிலை-03-குழுமம் நிலை-03-பயிற்சி
வகுப்பு-04 (Grade-04) நிலை-04-இணைப்பு நிலை-04-குழுமம் நிலை-04-பயிற்சி
வகுப்பு-05 (Grade-05) நிலை-05-இணைப்பு நிலை-05-குழுமம் நிலை-05-பயிற்சி

 

இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சி

ILTN is Growing (ppt)

ஆகஸ்ட் மாத இறுதியில் (08-27-2016) நமது தமிழ்ப் பள்ளியின் 2016-2017 கல்வியாண்டு துவங்குகிறது. நமது பள்ளியின் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளி துவங்குவதற்கான ஆயுத்தங்களைச் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு நமது பள்ளியின் பாடங்களின் எழுத்து மற்றும் சொல் பயிற்சிகள் ஊடாடும் வகையில் (Interactive) வெளியிடப்படும்.

அமெரிக்க நடுநிலைப் பள்ளி  மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளில் ஊடாடும் மென்பொருள்களின் உபயோகத்தை நன்று  அறிவார்கள். அதற்கான உரலி இணைப்பு பாலசந்திரிகையிலும், இணையதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். எனவே எல்லா மாணவ, மாணவிகளும் இந்த சிறந்த வாய்ப்யை பயன்படுத்திக் கொள்ளவும். அடுத்த ஆண்டு திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளும், மாதிரி வினாத்தாள்களும் இதிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறு வடிவமைத்துள்ளோம்.

நமது www.ilerantamilnow.com இணையதளத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். முதலாவதாக நமது பாடப் புத்தகங்களை நமது மின்னங்காடியில் வாங்கிக் கொள்ளலாம்.  அனைத்து மாணவ, மாணவிகளும் புத்தங்கங்கள் வாங்குவது அவசியம். பாடப் புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் குழந்தைகளின் படிக்கும் மற்றும் எழுதும் திறனை வளர்க்க உதவும். புத்தகங்கள் விற்பதனால் கிடைக்கும் வருமானம் நமது பள்ளியின் மேம்பாட்டிற்காக செலவு செய்யப்படும்.

பாலசந்திரிகையின் முந்தைய இதழ்களைப் படிக்க உதவுமாறு  மின்நூலகம் அமைத்துள்ளோம். நீங்களும் நமது பள்ளியின் குழுமத்தில் ஒரு அங்கத்தினராகலாம்.  மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மற்ற தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் அங்கத்தினராகலாம். அங்கத்தினராவதின் மூலம் உங்கள் அன்பையும், ஆதரவையும் தெரிவிக்கிறீர்கள். அங்கத்தினராவதற்கு கட்டணம் ஏதுமில்லை.

நாம் வளர்கிறோம், நமது வளர்ச்சியில் பங்கு கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

வருக !!! வருக !!! உங்கள் வரவு நல்வரவாகுக !!!

தரணியெல்லாம்பரவி வாழும் தமிழ் இன மக்களுக்கு கோப்பலில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் !!!

நமது தமிழ் கற்பிக்கும் பணியின் அடுத்த கட்டமாக, தமிழை இணையத்தின் வாயிலாக கற்பிக்கும் முறையினை செயலாக்க விரும்புகின்றோம்.

இந்த இணைதளம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு தாய் மொழியான தமிழைப் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொரு பெற்றோரும் தனது வழித் தோன்றலுக்கு தர வேண்டிய கல்வி தாய் மொழி கல்வி. அதனைச் செம்மையாகவும் செழிப்பாகவும் செய்திட கரம் கொடுங்கள், தோள் கொடுங்கள், துணை தாருங்கள் என வேண்டி விரும்பி அழைக்கின்றோம்.

வருக !!! வருக !!! உங்கள் வரவு நல்வரவாகுக !!!

உயர்திரு. பேராசிரியர் முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்கள் நமது இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளிக்குக் கொடுத்துள்ள முகவுரையைக் கேட்க இங்கே சொடுக்கவும்.