இணையதளத் தமிழ்ப் பள்ளி

அன்புடையீர்,

வணக்கம்.

www.Ilearntamilnow.com இணையதளத் தமிழ்ப் பள்ளி 2013-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பெற்றோர்கள் உதவியுடனோ, அல்லது பள்ளி ஆசிரியரின் உதவியுடனோ மாணவ/மாணவிகள் இந்தத் தளத்தின் வாயிலாக தமிழ் மொழியைக் கற்று வருகிறார்கள்.

பாடத்திட்டம், புத்தகம், ஒளிப்படம், வினாடி-வினா:

இணையதளத் தமிழ்ப் பள்ளி, www.ilearntamilnow.com தனது பாடத்திட்டத்தின் கீழ் ஒரு வகுப்பிற்கு 25 பாடங்கள் வீதமாக ஐந்து வகுப்பிற்கு 125 பாடங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தேவையான பாடப்புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள் இந்த இணையதளத்தில் விற்கப்படுகின்றன.

Buy text and exercise book at http://ilearntamilnow.com/eshop

ஒவ்வொரு பாடத்திற்குமோர் ஒளிப்படம் தயாரித்து அந்த ஒளிப்படங்கள் Youtube.com-இல் உள்ளன.

Subscribe YouTube Channel at: https://www.youtube.com/c/Ilearntamilnow/playlists (entry free)

மாணவ, மாணவிகள்  படிக்கும் போது வரும் சந்தேகங்களை விவாதிக்க முகநூலில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு குழுமம் (Facebook Group) உருவாக்கப்பட்டுள்ளது.

Join our Facebook for group discussions: https://www.facebook.com/groups/ilearntamilnow (entry free)

மாணவ, மாணவிகள்  பயிற்சிகள் செய்ய ஒவ்வொரு வகுப்பிற்கும் குவிஸ்லெட்-ன் (Quizlet.com) தளத்தில் வினாடி-வினா முறையில் கேள்விகள் தொகுக்கப்பட்டுள்ளன.

Join Quizlet for interactive learning and Tamil vocabulary: www.quizlet.com Search for “ilearntamilnow” classes- (entry free)

சுய வழிகாட்டுதல் முறை (Self Guided Learning):

கல்வியாண்டு 2019-2020 முதல், நமது பள்ளியில் நமது பள்ளியில் சுய வழிகாட்டுதல் (Self Guided Learning) முறையில் கற்க உதவுமாறு இணையதளத்தினை மாற்றியமைத்துள்ளோம். இதில் சேர்ந்து படிக்க முன்பதிவு செய்தல் அவசியம். முன்பதிவு செய்த மாணவ/மாணவிகள் மட்டுமே தமிழ்த் திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்ள முடியும். அவ்வாறு சேர்ந்த வகுப்பில் 25 பாடங்களையும் படித்து முடித்தவர்களே தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் துவங்கும். ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். மாணவ/மாணவிகள் தாங்கள் பங்கேற்கும் வகுப்பில் பதிவு செய்தல் அவசியம். பதிவு/தேர்விற்கான கட்டணம் ஆண்டிற்கு $9.99.

பதிவு செய்த மாணவர்கள் நமது இணைய தளத்தில் அவர்களுக்குக் கொடுத்த கால அட்டவணைப்படி (Class Schedule) பாடங்களைப் படிக்க வேண்டும்.

ஒளிப்படப் பாடங்கள்: மாணவ/மாணவிகள் கால அட்டவணைப்படி ஒளிப்படங்களைக் காண வேண்டும்.

வினாடி-வினா: ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தபின் அந்தப்பாடத்திற்கான வினாடி-வினாவில் பங்கேற்க வேண்டும். உங்களுடைய வினாடி-வினா மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டு இறுதித் தேர்வில் சேர்க்கப்படும்.

க்விஸ்லெட் பயிற்சி: ஒவ்வொரு பாடத்திற்கான பயிற்சிகள் க்விஸ்லெட் தளத்தில் (www.quizlet.com) பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்து “Grade-xx:Ilearntamilnow.com” என்ற வகுப்பறைத் தேடிப் பதிவு செய்து கொள்ளவும். இதற்குத் தனியாகக் கட்டணம் கிடையாது.

புத்தகங்கள்: பதிவு செய்த மாணவ/மாணவிகள் பாடப் புத்தகங்களை நமது இணையதளத்திலேயே படிக்க முடியும். அவர்கள் விருப்பப்பட்டால் பாடப் புத்தகங்களை நமது மின்னங்காடியில்(eShop) வாங்கியும் படிக்கலாம்.  புத்தக விற்பனையில் வரும் தொகை நமது பள்ளியின் மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும்.

குழுமங்கள்: நீங்கள் படிக்கும் பாடத்தில் சந்தேகமிருந்தால் உங்கள் வகுப்பு ஆசிரியரை நேரடியாக மின்னஞ்சல் மூலமாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் வகுப்பிற்கான ஃபேஸ்புக் பக்கத்தில் உங்கள் சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடலாம்.

ஸ்கைப் வகுப்புக்கள்: நேரடியாக ஆசிரியரின் வாய்மொழியாகக் கற்க விரும்புபவர்கள் நமது பள்ளியின் ஸ்கைப் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு நேரம் பெற்று அவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம். இந்தச் சேவைக்குத் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.

எண்ணியல் பட்டயங்கள்: உங்கள் வகுப்பு ஆசிரியர்கள் உங்களைச் சிறப்புப் பயிற்சிகளில் பங்கேற்க அழைப்பார்கள். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்று எண்ணியல் பட்டயங்களைப் (Digital Badges) பெறலாம்.

அளவு முறை:  நமது இணையதளத்தில் “My profile” பகுதியில் நீங்கள் படிக்கும் முறையின் அளவுகள் பகிரப்படும்.

சான்றிதழ்: பதிவுசெய்து அந்த வகுப்பிற்கான ஒளிப்படங்கள் அனைத்தையும் பார்த்து, பாடங்களைப் படித்து, அனைத்து வினாடி வினாக்களிலும் பங்கேற்கும் மாணவ/ மாணவிகளுக்கு ஆண்டு இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

பரிசுகள்: குழந்தைகளுக்கு, தமிழ்ப் படிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குச் சிறப்புப் பரிசுகள் வழங்க, டல்லஸ் நகர் வாழ்

தமிழ் ஆர்வலர்

Mrs & Mr. Paul Pandian

திரு. பால்பாண்டியன்திருமதி. கீதா பாண்டியன் தம்பதியினர்

இசைந்துள்ளார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க: Admin@ilearntamilnow.com

வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!