08. வினைச்சொல்-பால், எண்

வினைச்சொற்கள் எவ்வாறு திணையைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி முந்தைய வகுப்பில் படித்துள்ளோம். இப்பாடத்தில் வினைச்சொற்கள் எவ்வாறு ‘பால்’, ‘எண்’ காட்டுகின்றன என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.

தமிழில் ‘பால்’ என்பது ‘Gender’ என்ற பொருளைத் தரும். இதனைத் தமிழில் கீழ்கண்ட  வகைகளாகப் பிரித்துள்ளார்கள். 

உயர்திணைக்குரிய பால்: ஆண்பால், பெண்பால், பலர்பால்.

அஃறிணைக்குரிய பால்: ஒன்றன் பால், பலவின் பால்.

இப்போது “செய்” என்னும் வினையடியுடன் பாலைக் காட்டும் ‘விகுதி’ எப்படிச் சேர்ந்துள்ளது என்று பார்ப்போம்.

இதில் “’ஆன்’விகுதி ஆண்பாலைக் காட்டுகிறது.  மற்றும் ‘எண்களில்’ இது ஒருமையைக் காட்டுகிறது.

இப்போது கீழே கொடுத்துள்ள உதாரணத்தில் மற்றும் ஒரு விகுதியைப் பார்ப்போம்.

இதில் “’ஆள்’விகுதி பெண்பாலைக் காட்டுகிறது.  மற்றும் ‘எண்களில்’ இது ஒருமையைக் காட்டுகிறது.

இதில் “ஆர்” என்னும் விகுதி உபயோகிக்கப் பட்டுள்ளது. இது உயர்திணைக்கான ‘பலர்பால்’ விகுதியாகும். வயதில் பெரியவர்கள், ஆசிரியர்கள், அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள், போன்றவர்களைக் குறிப்பிடும் போது அவர்களுக்குறிய மரியாதையை வழங்கும் பொருட்டு உபயோகிக்கப் படுகிறது. மற்றும் ‘எண்களில்’ இது ஒருமையைக் காட்டுகிறது.

இதில் “ஆர்கள்” என்னும் விகுதி உபயோகிக்கப் பட்டுள்ளது. இது உயர்திணைக்கான ‘பலர்பால்’ விகுதியாகும். இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் செய்யப்படும் வினையைக் குறிக்க உபயோகிக்கப் பட்டுள்ளது.

இப்போது கீழே கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் அஃறிணைக்கான சில விகுதிகளைப் பார்க்கலாம்.

இதில் ‘அது’ என்ற விகுதி அஃறிணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ‘உம்’ விகுதியும் அஃறிணையைக் குறிக்கப் உபயோகிக்கப் படுகிறது. மற்றும் ‘எண்களில்’ இது ஒருமையைக் காட்டுகிறது.

இதில் ‘அன’ என்ற விகுதி அஃறிணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ‘உம்’ விகுதியும் அஃறிணையைக் குறிக்கப் உபயோகிக்கப் படுகிறது. மற்றும் ‘எண்களில்’ இது பன்மையைக் காட்டுகிறது.

இந்தப்பாடத்தில் பால், மற்றும் எண் பற்றியும், வினைச்சொல்லின் விகுதிகள் எவ்வாறு பாலையும், எண்ணையும்  காட்ட உதவுகின்றன என்று படித்தோம். நமது அடுத்த பாடத்தில் வினைச்சொற்களைப் பற்றி மேலும் படிக்கலாம்.

06. வினைச்சொல்-திணை

வினைச்சொற்கள் எவ்வாறு காலம் காட்டுகின்றன என்பதைப் பற்றி முந்தைய வகுப்பில் படித்துள்ளோம். இப்பாடத்தில் வினைச்சொற்கள் எவ்வாறு திணையைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.

தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். தமிழில் சொற்களை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.

ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், அஃறிணை. அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும். இப்போது “செய்” என்னும் வினையடியுடன் திணையைக் காட்டும் ‘விகுதி’ எப்படிச் சேர்ந்துள்ளது என்று பார்ப்போம்.

இதில் “’ஆன்’, ‘ஆய்’ ‘ஏன்’ போன்ற விகுதிகள் உயர்திணையைக் காட்டுகின்றன. 

இப்போது கீழே கொடுத்துள்ள உதாரணத்தில் மற்றும் ஒரு விகுதியைப் பார்ப்போம்.

இதில் “ஆர்” என்னும் விகுதி உபயோகிக்கப் பட்டுள்ளது. இது உயர்திணைக்கான விகுதியாகும். வயதில் பெரியவர்கள், ஆசிரியர்கள், அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள், போன்றவர்களைக் குறிப்பிடும் போது அவர்களுக்குறிய மரியாதையை வழங்கும் பொருட்டு உபயோகிக்கப் படுகிறது.

இப்போது கீழே கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் அஃறிணைக்கான சில விகுதிகளைப் பார்க்கலாம்.

இதில் ‘அது’ என்ற விகுதி அஃறிணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ‘உம்’ விகுதியும் அஃறிணையைக் குறிக்கப் உபயோகிக்கப் படுகிறது. கிழே கொடுத்துள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

இந்தப்பாடத்தில் திணையைப் பற்றியும், வினைச்சொல்லின் விகுதிகள் எவ்வாறு திணையைக்  காட்ட உதவுகின்றன என்று படித்தோம்.  ‘ஆன்’, ‘ஆள்’, ‘ஆர்’, ‘ஆய்’, ‘ஏன்’ போன்றவை உயர்திணைக்கான விகுதிகள். ‘அது’, ‘உம்’ போன்றவை அஃறிணைக்கான விகுதிகள். நமது அடுத்த பாடத்தில் வினைச்சொற்களைப் பற்றி மேலும் படிக்கலாம்.

04. வினைச்சொல்-காலங்கள்

வினைச்சொற்களைப் பற்றிய விளக்கங்களையும் அதன் வகைகளையும் முந்தைய வகுப்பில் படித்துள்ளோம். இன்று வினைச்சொற்களைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.

ஒரு சொற்றொடரில் வினையை அல்லது செயலைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும். ஒரு வினை அல்லது செயல் கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடை பெறலாம். இப்போது ஒரு வினைச் சொல் எவ்வாறு காலம் காட்டுகிறது என்பதைப் படிப்போம்.

இப்போது “செய்” என்னும் வினையடி மூன்று காலங்களில் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

இதில் “செய்தான்” என்பது இறந்தகாலத்தைக் காட்டும் வினைச்சொல்.  “செய்கிறான்” என்பது நிகழ்காலத்தைக் காட்டும் வினைச்சொல். “செய்வான்” என்பது எதிர்காலத்தைக் காட்டும் வினைச்சொல்.

இப்போது இந்த மூன்று சொற்களையும் பிரித்துப் பார்க்கலாம்.

இதில் “செய்” என்பது வினையடி. மூன்று காலங்களுக்கும் பொதுவானது. “ஆன்”  என்ற விகுதி மூன்று காலங்களுக்கும் பொதுவானது. எனவே காலத்தைக் காட்டும் இவை இரண்டுக்கும் இடையில் வரும் இடைநிலையாகும்.

இதில் “த்” இறந்த காலம் காட்டும் இடைநிலை.

இதில் “கிற்” நிகழ்காலம் காட்டும் இடைநிலை.

இதில் “வ்” எதிர்காலம் காட்டும் இடைநிலை. இப்போது, மேலும் சில உதாரணங்கள் பார்ப்போம்.

மேலும் சில கடந்த கால இடைநிலைகள் ண்ட், ன்ற், ந்த், த், ட்ட், ற்ற், ன்ன், இன் ஆகியவை.

மேலும் சில நிகழ்கால இடைநிலைகள் கிற், கின்ற், க்கின்ற், ட்கிற் ஆகும்

மேலும் சில எதிர்கால இடைநிலைகள் வ், ற்ப், ருவ், ப்ப் ஆகும்.

எனவே நாம் இப்பாடத்திலிருந்து வினைச் சொற்களில் வரும் இடைநிலைகள் காலத்தை காட்டுகின்றன என்று அறிந்து கொண்டோம்.

02. இலக்கணம் – மீள்பார்வை

இந்தப் பாடத்தில் நாம் முந்தைய வகுப்பில் படித்தவற்றை  ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இதுவரை உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து, உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிப் படித்துள்ளோம்.

பிறகு கிரந்த எழுத்துக்கள் பற்றிப் படித்துள்ளோம்.

நாம் எழுத்திலக்கணத்தில் முதல் எழுத்து, சார்பெழுத்துப் பற்றிப் படித்துள்ளோம். உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்த்து முதல் எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உயிர் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள், நெடில் எழுத்துக்கள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மெயெழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அதே போல் சார்பெழுத்துக்களை உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து, உயிரெளபடை, ஒற்றளபடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரகுறுக்கம், மகரகுறுக்கம், ஆயத குறுக்கம் என பத்து வகைகளாப் பிரிக்கலாம் என்று அறிந்தோம்.

அதைத் தவிர பேச்சின் கூறுகளாக (Parts of speech)

  1. பெயர்சொற்கள் (Nouns )
  2. பிரதிப் பெயர்சொற்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள் (Pronouns)
  3. வினைச்சொற்கள் (Verbs )

ஆகியவற்றைக் கற்றுள்ளோம்.  இந்த வகுப்பில்

  1. பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்  / பெயரடை (Adjectives)
  2. வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள் / வினையடை (Adverbs)
  3. முன்னிடைச்சொற்கள் (Prepositions )
  4. இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள் (Conjunctions)
  5. வியப்பிடைச்சொற்கள் (Interjections)

ஆகியவற்றைப் பற்றிக் கற்க உள்ளோம். வினைச் சொற்களை விரிவாகவும், வினாச்சொற்கள், நிபந்தனைச் சொற்கள் ஆகியவற்றைக் கற்க உள்ளோம்.

16. ஒருமை, பன்மை

ஒரு தமிழ் வாக்கியத்தில் ஒரு பொருளைக் குறிப்பது ஒருமை. பல பொருட்களைக் குறிப்பது பன்மை. ஒருமை அல்லது பன்மை இரண்டையும் சேர்த்து ‘எண்’ என்று அழைக்கலாம்.

எடுத்துக்காட்டு

  1. கிளி பறந்தது – இதில் ‘கிளி’ என்பது ஒருமை.
  2. கிளிகள் பறந்தன. – இதில் ‘கிளிகள்’ என்பது பன்மை.

ஒரு வாக்கியத்தில் பெயர்சொல், பிரதி பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் பேசப்படும் பொருள் ஒருமையா அல்லது பன்மையா என்று காட்டும். 

இதில் ‘கிளி’ என்ற ஒருமைப் பெயர்ச்சொல்லுடன் ‘கள்’ விகுதி சேர்ந்து ‘கிளிகள்’ என்று வரும் போது அது பன்மைப் பெயர்ச்சொல்லாகிறது.

இப்போது சில ஒருமைப் பெயர்ச்சொற்களையும் அதற்கான பன்மைச் சொற்களையும் படிக்கலாம்.

இதில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. இப்போது மேலும் சில சொற்களைப் படிக்கலாம்.

இதில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ம்’ மறைந்து ‘ங்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. இப்போது மேலும் சில சொற்களைப் படிக்கலாம்

சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ள்’ மறைந்து ‘ட்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘ல்’ மறைந்து ‘ற்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது. சிலவற்றில் ஒருமைப் பெயர்ச் சொல்லுடன் ‘க்கள்’ சேர்ந்து பன்மையாக வந்துள்ளது.

இப்போது பிரதிப் பெயர்ச்சொற்களில் ஒருமை பன்மை பற்றிப் படிக்கலாம். பிரதிப் பெயர்ச்சொற்களில் ஒருவரை மரியாதையுடன் விளிக்கும் போது பன்மையாக்கி அழைப்பது வழக்கம்.

மேலும் சில விதமாக ஒருமை பன்மை காட்டப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

“அது மாடு” என்று குறிப்பிடும் போது மாடு ஒருமையைக் குறிக்கிறது. “அவை மாடு” என்று குறிப்பிடும் போது அது பன்மையை குறிக்கிறது. இங்கு ‘சேரும் பிரதிப் பெயர்ச் சொல்லால்’ பன்மையாகியது.

“மாடு வந்தது” என்று குறிப்பிடும் போது மாடு ஒருமையைக் குறிக்கிறது. “மாடு வந்தன” என்று குறிப்பிடும் போது அது பன்மையை குறிக்கிறது. இங்கு “சேரும் வினைச் சொல்லால்” பன்மையாகியது.

“ஒரு பழம் என்ன விலை?” என்று குறிப்பிடும் போது “ஒரு” ஒருமையைக் குறிக்கிறது. “நூறு பழம் என்ன விலை?” என்று குறிப்பிடும் போது “நூறு” பன்மையை குறிக்கிறது. இங்கு “சேரும் பிரதிப் பெயர்ச்சொல்லால்” பன்மையாகியது.

14. இலக்கணம் – வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் செயலை (வினையை) உணர்த்துவதாகும்.

எடுத்துக்காட்டு:

  • கண்ணன் ஓடினான்.

இந்த வாக்கியத்தில் ஓடினான் அல்லது ஓடு வினைச்சொல்லாகும்.

  • சூர்யா பாடுகிறான்.

என்ற வாக்கியத்தில் பாடுகிறான் அல்லது ‘பாடு’ வினைச்சொல்லாகும்.

ஒரு பொருளின் தொழிலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று படித்தோம்.

  1. அம்மா அழைக்கிறாள்
  2. பாப்பா வருகிறாள்

என்னும் தொடர்களில் அம்மா, பாப்பா என்னும் பெயர்கள் உயிர் உள்ளவர்களைக் குறிக்கும்.

  1. நிலம் அதிர்ந்தது.
  2. நீர் ஓடுகிறது.

என்னும் தொடர்களில் உள்ள நிலம், நீர் என்னும் பெயர்கள் உயிரற்ற பொருள்களைக் குறிக்கும். ஆகவே, பெயர்ச்சொல்லின் (உயிர்ப்பொருள், உயிரற்ற பொருள்) தொழிலையே வினை என்கிறோம்.

வினைச் சொற்களை முற்றுவினை, எச்சவினை என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு செயல் முடிவு பெற்றால் அந்த வாக்கியத்தில் வரும் வினைச்சொல் ‘முற்று’ எனப்படும். ஒரு செயல் முடியாவிட்டால் அந்த வாக்கியத்தில் வரும் முடிவு பெறாத வினைச்சொல் ‘எச்சம்’ எனப்படும்.

  • கோபால் எங்கள் வீட்டிற்கு வந்தான்.

இதில் ‘வந்தான்’ என்பது முடிந்து விட்ட செயலைக் காட்டுகிறது.  எனவே அது வினைமுற்று. வினைமுற்றுவை ஒரு தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைகளாகப் பிரிக்கலாம். தெரிநிலை வினைமுற்று காலத்தை வெளிப்படையாகக் காட்டும். குறிப்புவினைமுற்று பொருளின் காலத்தைக் குறிப்பாக  உணர்த்தும்.

  • குழந்தை அழுகிறது. – இதில் அழுகிறது என்ற வினைமுற்று நிகழ்காலத்தைக் காட்டுகிறது.
  • அவன் தச்சன். – இதில் ‘தச்சன்’ என்னும் சொல் தச்சு வேலை செய்பவன் என்று வினையைக் காட்டினாலும் காலத்தை தெளிவாகக் காட்டவில்லை.

எச்சவினையைப் பெயரெச்சம், வினையெச்சம் எனப் பிரிக்கலாம்.

  • அவன் வீட்டிற்கு வந்து சாப்பிட்டான்.

இதில் ‘வந்து’ என்பது வினையெச்சம் (வந்து என்பதற்குப் பிறகு ஒரு வினைச்சொல் வந்ததால் அது வினையெச்சம்.

  • அவனுடன் வந்த பையனும் சாப்பிட்டான்.

இதில் ‘வந்த’ என்பது பெயரெச்சம் (வந்த என்பதற்குப் பிறகு ஒரு பெயர்ச்சொல் வந்ததால் அது பெயரெச்சம். வினைச்சொற்கள் எவ்வாறு, காலம், திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டும் என்பதை நாம் மேல் வகுப்புக்களில் படிக்கலாம். நாம் மேல் வகுப்பில் பெயரெச்சம், வினையெச்சம் பற்றி விரிவாகப் படிக்கலாம்.

12. இலக்கணம் – பிரதிப் பெயர்ச்சொல்

சுட்டுப்பெயர்ச்சொற்கள் அல்லது  பிரதிப் பெயர்ச்சொற்கள் என்பவை ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

பிரதிப் பெயர்ச்சொற்களை கீழ்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் எழுவாயைக் குறித்துவரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் செயப்படுபொருளைக் குறித்துவரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் அனிச்சைச் செயலைக் குறித்துவரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் உரிமையைக் காட்டவரும்

சுட்டுப்பெயர்ச்சொற்கள் குறிப்பிட்டுக் காட்டவரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் கேள்வியைக் காட்டவரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் எண்களாகவும் வரும்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் மேலும் சில விதங்களில் வரும்.

10. இலக்கணம் – பெயர்ச்சொல்

பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

தமிழில் பெயர்ச் சொற்களை ஆறு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவை

  1. பொருட் பெயர்
  2. இடப் பெயர்
  3. காலப் பெயர்
  4. சினைப் பெயர்
  5. பண்புப் பெயர்
  6. தொழிற் பெயர்

பொருட்களுக்கு அல்லது நபர்களுக்கு இட்டு வழங்கபெரும் பெயர்ச்சொற்களை பொருட்பெயர் என்றழைப்பர்.

உதாரணமாக:             பை, மரம், காய், கனி

முத்து, பேச்சியப்பன், கருப்பசாமி.

மலர்விழி, தேன்மொழி, அம்மன்.

புல், மீன், நாய், யானை.

இடப்பெயர் ஓர் இடத்திற்கான அல்லது இடத்தைக் காட்டுகின்ற பெயர்கள் ஆகும்.

உதாரணமாக: கோயில், ஊர், இந்தியா, சென்னை, மதுரை.கோப்பல், டல்லாஸ், அமெரிக்கா.

காலத்தைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் காலப் பெயர்கள் எனப்படுகின்றன.

உதாரணமாக        ஆண்டு, வினாடி, கிழமை.

மாசி, பங்குனி, இளவேனில் கோடைக் காலம்.

பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள்.

உதாரணமாக: கை, கண், கிளை, இலை

பண்புப் பெயர் என்பது ஒரு பொருளின் பண்பைக் குறித்து நிற்கும் பெயர்ச்சொல்லைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக நீலம் என்பது நிறமாகிய பண்பைக் குறிப்பதால், அது ஒரு பண்புப் பெயர் ஆகும். இவ்வாறே, நீளம், மென்மை, புளிப்பு போன்ற சொற்களும் பண்புப் பெயர்களாகும். சில சமயங்களில், பண்புப் பெயரை, நிறம், வடிவம், அளவு, சுவை என்பன போன்ற அடிப்படைகளில் வகைப்படுத்துவதும் உண்டு. பண்புப்பெயரைக் குணப்பெயர் என்றும் வழங்குவர்.

உதாரணமாக: வடிவம் : வட்டம், சதுரம், முக்கோணம்

சுவை : இனிப்பு, இனிமை, கசப்பு, துவர்ப்பு

அளவு : ஒன்று, ஒருமை, மூன்று

குணம் : நன்மை, தீமை, பெருமை, வன்மை, நல்லன், இனியன்.

ஒரு செயல்பாட்டை உணர்த்தும் பெயர்ச்சொல் தொழிற்பெயர் எனப்படும்.

உதாரணமாக:       செயல், செய்கை, செய்தல்.

                  நடத்தல், ஓடுதல், மகிழ்தல்.

                  பறித்தல், சுவைத்தல், சிரித்தல்.

குறிப்பு: பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.

08. இலக்கணம் – பேச்சின் கூறுகள்

தமிழ் மொழியில் பயன்படும் சொற்களின் பயன்பாட்டை எளிதாக விளங்கிக் கொள்வதற்கும், கற்பதற்கும் சொற்களை பல்வேறு கூறுகளாக வகைப்படுத்தியுள்ளார்கள். அவைகள “பேச்சின் கூறுகள்” அல்லது “சொற்களின் வகைகள்” என்றும் கூறுவர்.

இவ்வாறு சொற்களை எட்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். அவைகள்:

  1. பெயர்சொற்கள்(Nouns)
  2. சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப் பெயர்ச்சொற்கள் (Pronouns)
  3. வினைச்சொற்கள் (Verbs)
  4. பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள் / பெயரடை (Adjectives)
  5. வினையெச்சங்கள் / வினையுரிச்சொற்கள்/ வினையடை (Adverbs)
  6. முன்னிடைச்சொற்கள் (Prepositions)
  7. இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள் (Conjunctions)
  8. வியப்பிடைச்சொற்கள் (Interjections)

இதைத் தவிர

  • வினாச்சொற்கள்
  • நிபந்தனை சொற்கள்

என்பவையும் உண்டு.

பெயர்சொற்கள்: பொருட்கள், நபர்கள், இடங்கள் போன்றவற்றை குறிக்கும் பெயர்கள் அல்லது சொற்கள் பெயர்ச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக: புத்தகம், அதிகாரி, மதுரை, கந்தன், தமிழ்.

சுட்டுப்பெயர்ச்சொற்கள் / பிரதிப் பெயர்ச்சொற்கள்: ஒன்றின் அல்லது ஒருவரின் பெயரைக் குறிப்பிடாமல்; அதற்கு பதிலாக சுட்டிக்காட்டி பேசுவதற்கு பயன்படும் சொற்கள் சுட்டுப்பெயர்கள் அல்லது சுட்டுப்பெயர்ச்சொற்கள் என அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டாக: அவன், அவள், அது, அவனை, அவளை.

வினைச்சொற்கள்: வினையை அல்லது செயலை குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும்.

எடுத்துக்காட்டுகள்: செய், வா, பேசு, கேள், போ.

பெயரெச்சங்கள் / பெயரடைகள் / பெயருரிச்சொற்கள்: ஒரு பொருளின், இடத்தின், நபரின் (பெயரின்) குணத்தினை அல்லது தன்மையை மேலும் விவரித்துக்கூற பயன்படும் சொற்கள் பெயரெச்சங்களாகும். இவை சுட்டுப்பெயர்களை விவரித்துக்கூறவும் பயன்படும்.

எடுத்துக்காட்டாக: சிகப்பு, மஞ்சள், பெரிய, சிறிய, அழகான

வினையெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டாக: கோபமாக, உண்மையாக, வேகமாக, மென்மையாக


முன்னிடைச்சொற்கள்: ஒரு வாக்கியத்தின் பெயர்சொற்களுக்கும் சுட்டுப் பெயர்சொற்களுக்கும் முன்பாக/உடன் பயன்படும் சொற்கள் முன்னிடைச்சொற்களாகும். இவைகளைப் பற்றி மேலும் விரிவாக வேற்றுமை உருபுகள் பற்றிய பாடத்தில் படிக்கலாம்.

எடுத்துக்காட்டாக: கீழே, மேலே, ஆக, இருந்து, உடன்.

இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள்: இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சொற்கள் மற்றும் வாக்கியங்கள் இடையே இணைப்பை ஏற்படுத்தும் சொற்கள் இணைப்புச்சொற்களாகும். இதனை இடையிணைப்புச் சொற்கள் என்றும் கூறலாம்.

எடுத்துக்காட்டாக: உம், ஆனால், அல்லது, ஏனெனில்

வியப்பிடைச்சொற்கள்: பேச்சின் பொழுது வியப்பு, ஆச்சரியம் போன்ற உணர்வை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வியப்பிடைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக: ஐயகோ, ஆகா, ஓகோ

வினாச்சொற்கள்: பேச்சின் பொழுது கேள்வியை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் வினாச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக: எங்கே, எப்படி, ஏன், யார், எப்போது

நிபந்தனைச்சொற்கள்: பேச்சின் பொழுது நிபந்தனையை வெளிப்படுத்தப் பயன்படும் சொற்கள் நிபந்தனைச்சொற்களாகும்.

எடுத்துக்காட்டாக: வந்திருந்தால், போயிருந்தால், பார்த்திருந்தால் இனி அடுத்த வகுப்புகளில் ஒவ்வொரு பேச்சின் கூறுகளைப் பற்றி விரிவாகப் படிக்கலாம்.

06. இலக்கணம் – சார்பெழுத்துக்கள்

முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் எனப்படும். அவை,

உயிர்மெய் ஆய்தம்
உயிரளபெடை ஒற்றளபெடை
குற்றியலுகரம் குற்றியலிகரம்
ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம் ஆய்தக் குறுக்கம்

என்னும் பத்து ஆகும்.

உயிர்மெய்

மேற்கண்ட பட்டியலில் உள்ள எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படுகின்றன. மெய்யெழுத்துகளுடன் உயிர் எழுத்துகள் சேர்வதால் உண்டாகும் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துகள் ஆகும். எனவே இவை 18 (மெய் எழுத்துகள்) x 12 (உயிர் எழுத்துகள்)=216 (உயிர்மெய் எழுத்துகள்) ஆகும்.  

உயிர்மெய் எழுத்து எவ்வாறு உருவாகிறது என்று முந்தைய வகுப்பில் விரிவாகப் படித்துள்ளோம். மீள்பார்வையாக ‘க’ என்ற எழுத்தை எடுத்துக் கொள்வோம்.

‘க்’ என்ற எழுத்து வடிவம் ‘க’ என்ற எழுத்தில் உள்ளது. எனவே இது மெய் எழுத்தைச் சார்ந்து வருகிறது என்பது தெரிய வருகிறது.

‘க’ என்ற எழுத்தைச் சொல்லிப் பாருங்கள்.

க் + அ; க்அ = க.

‘க்’ என்ற மெய் எழுத்து முதலிலும் ‘அ’ என்ற உயிர் எழுத்து இரண்டாவதாகவும் இணைந்து ஒலிக்கக் ‘க’ என்ற எழுத்து கிடைக்கிறது. எனவே ‘க’ என்ற எழுத்து உயிர், மெய் என்ற இரண்டையும் சேர்ந்து ஒலிக்கும் எழுத்து என்பது தெரிய வருகிறது.

இதுபோலவே மேற்காட்டிய 216 எழுத்துகளும் முதல் எழுத்துகளைச் சார்ந்தே ஒலிக்கின்றன.

உயிர்மெய் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவை குறில், நெடில் ஆகியன. குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப்படும். நெடிய ஒலிகளுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.

அ, இ, உ, எ, ஒ என்ற குறில் உயிர் எழுத்துச் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் குறில் எழுத்துகள் ஆகும்.

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற நெடில் உயிர் எழுத்துகளின் சார்பாகப் பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்படும்.

இது தவிர இந்த எழுத்துகளை அவற்றின் மெய் ஒலிகள் அடிப்படையில் இன்னும் மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை வல்லினம், மெல்லினம், இடையினம் என்பனவாகும்.

க், ச், ட், த், ப், ற் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் வல்லின உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் மெல்லின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

ய், ர், ல், வ், ழ், ள் என்னும் எழுத்துகளைச் சார்ந்து பிறக்கும் உயிர்மெய் எழுத்துகள் இடையின உயிர்மெய் எழுத்துகள் எனப்படும்.

ஆய்தம்

ஃ என்ற எழுத்து ஆய்தம் எனப்படுகிறது. இதனை அஃகு என்று கூறுவர். ஃ என்ற இந்த எழுத்து ‘அ’ என்ற உயிர் எழுத்தையும் ‘கு’ என்ற உயிர்மெய் எழுத்தையும் சேர்த்தே ஒலிக்கப்படும்.

உயிர் எழுத்தை முதலாகவும், வல்லின உயிர்மெய் எழுத்தை இறுதியாகவும் கொண்டு இது இடையில் வரும். தனித்து வராது. எனவே இது சார்பெழுத்து எனப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, அஃது, எஃது. மற்ற எட்டு வகை சார்பெழுத்துக்களைப் பெரிய வகுப்புகளில் படிக்கலாம்.