தேர்வு

தமிழ்த் திறனாய்வுத் தேர்வுகள்

அன்புடையீர்,

வணக்கம். www.ilearntamilnow.com இணையதளத் தமிழ்ப் பள்ளி, நமது பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அனைத்துத் தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளையும், தமிழ்த் திறனாய்வுத் தேர்வில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறது.

இத்தேர்வில் உலக அளவில் மாணவ, மாணவிகள், கலந்து கொள்கிறார்கள். மாணவ மாணவிகள் தங்கள் வீட்டிலிருந்தே தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். முதல் கட்டத் தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள், ஸ்கைப் (Skype) மூலமாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்பார்கள். தேர்வில் புலம் பெயர்ந்து வாழும் எல்லாத் தமிழ்க் குழந்தைகளும் கலந்து கொள்ளலாம்.

கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் நமது குவிஸ்லெட்டின் (www.quizlet.com) வகுப்பில் பதிவு செய்து, பயிற்சி செய்தல் அவசியம். தேர்வின் மற்ற வழிமுறைகளும், விதிமுறைகளும் பதிவு செய்தோருக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

தேர்வில் கலந்து கொள்ள ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளி தொடங்கும் நாள் முதல் ஏப்ரல் மாதம் இறுதி வரை கீழ்கண்ட உரலியில் சொடுக்கிப் பதிவு செய்யலாம்.

தேர்வில் கலந்து கொள்ள பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

தேர்வுக் கட்டணமாக $9.99 வசூலிக்கப்படும். தேர்வுக்காகப் பதிவு செய்தவுடன் கீழ்கண்ட உரலியில் சொடுக்கிக் கட்டணத்தைச் செலுத்தவும்.

தேர்வுகள் மே-ஜூன் மாதங்களில் நடைபெறும், தேர்வின் முடிவுகள் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்படும். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.  சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் உண்டு.

குழந்தைகளுக்கு, தமிழ்ப் படிக்கும் ஆர்வத்தை அதிகப் படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும், ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்க, டல்லஸ் நகர் வாழ்

தமிழ் ஆர்வலர்

Mrs & Mr. Paul Pandian

திரு. பால்பாண்டியன்திருமதி. கீதா பாண்டியன் தம்பதியினர்

இசைந்துள்ளார்கள்.

அனைவரும் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

வாழ்க தமிழ் !!! வளர்க தமிழ் !!! வெல்க தமிழ் !!!