எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. ஒரு பெயர்சொல்லை அழைக்கும் போது சேரும் ஓலியை என்னெவென்று அழைப்பர்? எட்டாம் வேற்றுமைக்கு வேறு பெயர் என்ன? இது விளிவேற்றுமை என்றும் அழைக்கப் படுகிறது. விளித்தல் என்பதற்கு அழைத்தல் அல்லது கூப்பிடுதல் என்பது பொருள்.
எடுத்துக்காட்டாக, ‘இராமா! வா’ என விளிக்கும்போது (அழைக்கும் போது) இராமன் என்னும் பெயரின் இறுதியில் ‘ஆ’ என்னும் ஒலி சேர்ந்து மாறுதல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர்ச்சொற்கள் விளிக்கப்படும்பொழுது, அவை, ஈறு திரிதலும் (இறுதிஎழுத்து மாறுதல்), ஈறு குன்றலும் (குறைதல்), ஈறு மிகுதலும், இயல்பாக வருதலும், ஈற்றுஅயல் எழுத்துத் திரிதலும் (ஈற்றுஅயல் = இறுதி எழுத்துக்கு முந்தைய எழுத்து) எட்டாம் வேற்றுமை ஆகும்
ஈறுதிரிதலுக்கு எடுத்துக்காட்டாக
இவைகளில் “ஐ” என்னும் இறுதி எழுத்து ஆய் எனத் திரிந்துள்ளது.
ஈறுகுன்றலுக்கு எடுத்துக்காட்டாக
இவைகளில் “ன்” என்ற இறுதி எழுத்துக் குறைந்தது.
ஈறுமிகுதலுக்கு எடுத்துக்காட்டாக
இவைகளில் “ஏ” என்ற இறுதி எழுத்து மிகுந்தது.
இவைகளில் மாற்றம் இன்றி வந்துள்ளது.
இவைகளில் ஈற்றுஅயல் (இறுதி எழுத்துக்கு முந்தையஎழுத்து) நீண்டது. விளிவேற்றுமையில் ஏற்படும் மாறுதல்களை மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.
வேற்றுமைத் தொகை
ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும் மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும். உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில் பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகை எனப்படும்.
“மலைக் கோவில்” இந்த வாக்கியத்தில் மறைந்துள்ள வேற்றுமை எது?
ஏழாம் வேற்றுமைத் தொகை.