ஏழாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள சில வாக்கியங்களைப் பார்ப்போம்.
- வீடு ஊரின்கண் உள்ளது.
- வீடு ஊரில் உள்ளது.
- குழந்தை அம்மாவிடம் சென்றது.
ஏழாம் வேற்றுமை உருபுகள் ‘கண்’ ‘இல்’ ‘இடம்’ ‘. இதில் ‘கண்’ அதிகமாக தற்காலத்தில் உபயோகத்தில் இல்லை. அதற்குப் பதிலாக ‘இல்’ ‘இடம்’ ஆகியவற்றை அதிகமாக உபயோகிக்கிறோம்.
ஏழாம் வேற்றுமை உருபு ஐந்தாம் வேற்றுமை சொல் உருபு ‘இருந்து’, கூடச் சேர்ந்து இலிருந்து, இடமிருந்து என்று வரும்.
- அப்பாவிடமிருந்து கடிதம் வந்தது.
- கிணற்றிலிருந்து நீர் இறைக்கிறார்கள்.
ஏழாம் வேற்றுமை உருபுகள் வினை நிகழும் இடத்தைக் குறிக்கும் மற்றும் காலத்தையும் குறிக்கும். எனவே ஏழாம் வேற்றுமைக்கு “இட வேற்றுமை” என்று பெயர் உண்டு.
பெயர்ச் சொல்லுடன் ‘இல்’, ‘இலிருந்து’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘இல்’, ‘இலிருந்து’
சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
பெயர்ச் சொல்லுடன் ‘இடம்’, ‘இடமிருந்து’ ’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘இடம்’, ‘இடமிருந்து’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
கீழே கொடுத்துள்ள இருபத்தெட்டும் ஏழாம் வேற்றுமை உருபுகளாகும். இவைகளின் முக்கியமானவற்றைப் பற்றி நாம் படித்தோம். மற்ற உருபுகளைப் பற்றி நாம் மேல் வகுப்புகளில் படிப்போம்.
- கண்-ஊரின்கண்
- கால்- ஊர்க்கால்
- கடை – வேலின்கடை
- இடை- நல்லாரிடை
- தலை – வலைத்தலை
- வாய் – கடல் வாய்
- திசை – தேர்த்திசை
- வயின் – அவர் வயின்
- முன் – கற்றார் முன்
- சார் – பொழில்சார்
- வலம் – கைவலம்
- இடம் – இல்லிடம்
- மேல் – தலைமேல்
- கீழ் – நிழற்கீழ்
- புடை – எயிற்புடை ( எயில்- மதில்)
- முதல் -இந்திரன் முதல்
- பின் – காதலி பின்
- பாடு — நும்பாடு
- அளை – கல்லளை
- தேம் – கொடாய்த் தேத்து
- உழை – அவணுழை
- வழி – நிழல்வழி
- உழி – உற்றுழி
- உளி – காவுளி ( கா- சோலை)
- உள் – குவட்டுள் (குவடு – மலை உச்சி)
- அகம் – பல்லாரகத்து
- புறம் – உயிர்ப்புறத்து
- இல் – ஊரில்
இந்தப் பாடத்தில் ஏழாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் எட்டாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.