ஆறாம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
- மன்னனது வரவு மக்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
- எனது கை வலிக்கிறது.
- மரத்தினது கிளையில் குருவி அமர்ந்துள்ளது.
இந்த வாக்கியங்களில்
“மன்னன்”, “மரம்”’ ஆகியவை பெயர்ச் சொற்கள். “என்” என்பது பிரதிப் பெயர்ச் சொல். அதனுடன் சேர்ந்து வந்துள்ள ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. இப்போது மேலும் சில எடுத்துக்காட்டுகள் பார்க்கலாம்.
- கண்ணனது பெற்றோர்கள் ஊரில் இருக்கிறார்கள்.
- முகிலனுடைய புத்தகம் தொலைந்து விட்டது.
இதில் இரண்டாவது வாக்கியத்தில் ‘முகிலன்’ என்ற பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ என்ற ஆறாம் வேற்றுமை சொல் உருபு சேர்ந்துள்ளது.
ஆறாம் வேற்றுமை பெயர் சொல்லின் உடமையை அல்லது உரிமையை விளக்கும்.
ஆறாம் வேற்றுமை உருபுகள் ‘அது’, ‘ஆது’, ‘அ’. மற்றும் ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமையின் சொல் உருபு.
இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘அது’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது சில பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘அது’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது சில பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘உடைய’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இந்தப் பாடத்தில் ஆறாம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் ஏழாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.