நான்காம் வேற்றுமை உருபுக்கு எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.
- கலா மாலாவிற்கு பேனா கொடுத்தாள்.
- இந்த உடை குளிருக்கு ஏற்றது.
முதல் வாக்கியத்தில் ‘கலா, மாலா, பேனா’ என்பது பெயர்ச்சொற்கள். ‘கொடுத்தாள்’ என்பது வினைச்சொல். ‘கு’ (விற்கு) என்பது நான்காம் வேற்றுமை உருபு.
அதேபோல் இரண்டாவது வாக்கியத்தில் ‘குளிருக்கு’ என்ற வார்த்தையில் உள்ள ‘கு’ என்பது நான்காம் வேற்றுமை உருபு.
நான்காம் வேற்றுமையில் ‘கு’ என்ற ஒரே உருபு உள்ளது. இதைத் தவிர நான்காம் வேற்றுமைக்கு ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, ‘ஆக’ போன்ற சொல் உருபுகளும் உண்டு. இதில் ஆக என்ற சொல் உருபு ‘கு’ உடன் சேர்ந்து வரும்.
உதாரணமாக,
- அவன் கூலியின் பொருட்டு வேலை செய்தான்.
- இவர்கள் உணவின் நிமித்தம் உழைத்தார்கள்.
- அவள் ஊருக்காக உழைத்தாள்.
முதல் வாக்கியத்தில் உள்ள ‘பொருட்டு’ நான்காம் வேற்றுமை சொல் உருபு. இரண்டாவது வாக்கியத்தில் ‘நிமித்தம்’ நான்காம் வேற்றுமை சொல் உருபு. முன்றாவது வாக்கியத்தில் உள்ள ஊருக்காக என்ற வார்த்தையில் ‘கு’ என்ற நான்காம் வேற்றுமை உருபுடன் ‘ஆக’ என்ற சொல் உருபு சேர்ந்து வந்துள்ளது. இப்போது சில பெயர்ச் சொல்லுடன் ‘கு’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இப்போது பிரதிப் பெயர்ச் சொல்லுடன் ‘கு’ சேரும் போது எவ்வாறு சேர்கிறது என்பதைப் பார்ப்போம்.
இந்தப் பாடத்தில் நான்காம் வேற்றுமை உருபுக்களைப் பற்றிப் படித்தோம். இனி அடுத்த வகுப்பில் ஐந்தாம் வேற்றுமை பற்றிப் படிப்போம்.