வினையெச்சங்கள் / வினையடைகள் / வினையுரிச்சொற்கள்: வினையின் அல்லது செயலின் தன்மையை மேலும் விவரித்து பேசுவதற்கு பயன்படும் சொற்கள் வினையெச்சங்கள் எனப்படும். எது
எடுத்துக்காட்டாக:
- படித்து முடித்தான்
- வந்து சென்றான்
- ஓடி மறைந்தான்
- பாடி முடித்தான்
- சென்று
வந்தான்
மேற்கண்டவற்றுள் படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும். வினையெச்சங்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம், எதிர்மறை வினையெச்சம், ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.
தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி
வினைச்சொல்லைக் கொண்டு முடிபவை எது.
எடுத்துக்காட்டாக:
- வந்து போனான்.
- சென்று வந்தான்.
குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல்
பண்பின் அடிப்படையில் வினைச்சொல்லைக் கொண்டு முடியும். இதனை வினையடை என்றும் அழைப்பர்.
எடுத்துக்காட்டாக:
- மெல்ல நடந்தான்
- கோபமாக பேசினான்
எதிர்மறை வினையெச்சம் எதிர்மறை அர்த்தத்துடன் வரும்.
எடுத்துக்காட்டாக:
- உண்ணாது சென்றான்.
- சொல்லாமல் செய்தான்.
ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பது ஈற்றெழுத்து கெட்டுவரும் எதிர்மறைப் வினையெச்சம் ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சமாகும். “ஆ” எனும் விகுதியில் முடியும். எடுத்துக்காட்டாக:
- உண்ணா சென்றான்.
- பாடா நின்றான்.
இதில் ‘து’ என்ற இறுதி எழுத்து கெட்டு (மறைந்து) வந்துள்ளது. மேலும் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
- வந்து குளித்து உண்டு உறங்கிப் பேசிச் சென்றான்.
இதில் வினையெச்சச் சொற்கள் அடுத்தடுத்து அடுக்கி வந்து, ஒரே வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளது.