வினைச்சொற்கள் எவ்வாறு காலம் காட்டுகின்றன என்பதைப் பற்றி முந்தைய வகுப்பில் படித்துள்ளோம். இப்பாடத்தில் வினைச்சொற்கள் எவ்வாறு திணையைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.
தமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும். தமிழில் சொற்களை உயர்திணைச் சொல் என்றும், அஃறிணைச் சொல் என்றும் இருவகைகளாகப் பிரிக்கலாம்.
ஆறு அறிவு உள்ள மக்கள் உயர்திணை. அறிவில் குறைந்த ஏனைய உயிரினங்களும், உயிர் இல்லாதனவுமாகிய பொருள்களும், அஃறிணை. அஃறிணை என்பது அல்+திணை, அதாவது உயர்வு அல்லாத திணை என்னும் பொருளைத் தரும். இப்போது “செய்” என்னும் வினையடியுடன் திணையைக் காட்டும் ‘விகுதி’ எப்படிச் சேர்ந்துள்ளது என்று பார்ப்போம்.
இதில் “’ஆன்’, ‘ஆய்’ ‘ஏன்’ போன்ற விகுதிகள் உயர்திணையைக் காட்டுகின்றன.
இப்போது கீழே கொடுத்துள்ள உதாரணத்தில் மற்றும் ஒரு விகுதியைப் பார்ப்போம்.
இதில் “ஆர்” என்னும் விகுதி உபயோகிக்கப் பட்டுள்ளது. இது உயர்திணைக்கான விகுதியாகும். வயதில் பெரியவர்கள், ஆசிரியர்கள், அதிகாரத்தில் உள்ள அதிகாரிகள், போன்றவர்களைக் குறிப்பிடும் போது அவர்களுக்குறிய மரியாதையை வழங்கும் பொருட்டு உபயோகிக்கப் படுகிறது.
இப்போது கீழே கொடுத்துள்ள எடுத்துக்காட்டில் அஃறிணைக்கான சில விகுதிகளைப் பார்க்கலாம்.
இதில் ‘அது’ என்ற விகுதி அஃறிணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் ‘உம்’ விகுதியும் அஃறிணையைக் குறிக்கப் உபயோகிக்கப் படுகிறது. கிழே கொடுத்துள்ள சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
இந்தப்பாடத்தில் திணையைப் பற்றியும், வினைச்சொல்லின் விகுதிகள் எவ்வாறு திணையைக் காட்ட உதவுகின்றன என்று படித்தோம். ‘ஆன்’, ‘ஆள்’, ‘ஆர்’, ‘ஆய்’, ‘ஏன்’ போன்றவை உயர்திணைக்கான விகுதிகள். ‘அது’, ‘உம்’ போன்றவை அஃறிணைக்கான விகுதிகள். நமது அடுத்த பாடத்தில் வினைச்சொற்களைப் பற்றி மேலும் படிக்கலாம்.