04. வினைச்சொல்-காலங்கள்

வினைச்சொற்களைப் பற்றிய விளக்கங்களையும் அதன் வகைகளையும் முந்தைய வகுப்பில் படித்துள்ளோம். இன்று வினைச்சொற்களைப் பற்றி மேலும் விரிவாகப் படிப்போம்.

ஒரு சொற்றொடரில் வினையை அல்லது செயலைக் குறிக்கும் சொற்கள் வினைச் சொற்களாகும். ஒரு வினை அல்லது செயல் கடந்தகாலத்தில், நிகழ்காலத்தில் அல்லது எதிர்காலத்தில் நடை பெறலாம். இப்போது ஒரு வினைச் சொல் எவ்வாறு காலம் காட்டுகிறது என்பதைப் படிப்போம்.

இப்போது “செய்” என்னும் வினையடி மூன்று காலங்களில் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

இதில் “செய்தான்” என்பது இறந்தகாலத்தைக் காட்டும் வினைச்சொல்.  “செய்கிறான்” என்பது நிகழ்காலத்தைக் காட்டும் வினைச்சொல். “செய்வான்” என்பது எதிர்காலத்தைக் காட்டும் வினைச்சொல்.

இப்போது இந்த மூன்று சொற்களையும் பிரித்துப் பார்க்கலாம்.

இதில் “செய்” என்பது வினையடி. மூன்று காலங்களுக்கும் பொதுவானது. “ஆன்”  என்ற விகுதி மூன்று காலங்களுக்கும் பொதுவானது. எனவே காலத்தைக் காட்டும் இவை இரண்டுக்கும் இடையில் வரும் இடைநிலையாகும்.

இதில் “த்” இறந்த காலம் காட்டும் இடைநிலை.

இதில் “கிற்” நிகழ்காலம் காட்டும் இடைநிலை.

இதில் “வ்” எதிர்காலம் காட்டும் இடைநிலை. இப்போது, மேலும் சில உதாரணங்கள் பார்ப்போம்.

மேலும் சில கடந்த கால இடைநிலைகள் ண்ட், ன்ற், ந்த், த், ட்ட், ற்ற், ன்ன், இன் ஆகியவை.

மேலும் சில நிகழ்கால இடைநிலைகள் கிற், கின்ற், க்கின்ற், ட்கிற் ஆகும்

மேலும் சில எதிர்கால இடைநிலைகள் வ், ற்ப், ருவ், ப்ப் ஆகும்.

எனவே நாம் இப்பாடத்திலிருந்து வினைச் சொற்களில் வரும் இடைநிலைகள் காலத்தை காட்டுகின்றன என்று அறிந்து கொண்டோம்.