02. இலக்கணம் – மீள்பார்வை

இந்தப் பாடத்தில் நாம் முந்தைய வகுப்பில் படித்தவற்றை  ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இதுவரை உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், ஆயுத எழுத்து, உயிர் மெய் எழுத்துக்கள் பற்றிப் படித்துள்ளோம்.

பிறகு கிரந்த எழுத்துக்கள் பற்றிப் படித்துள்ளோம்.

நாம் எழுத்திலக்கணத்தில் முதல் எழுத்து, சார்பெழுத்துப் பற்றிப் படித்துள்ளோம். உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் சேர்த்து முதல் எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உயிர் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள், நெடில் எழுத்துக்கள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

மெயெழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

அதே போல் சார்பெழுத்துக்களை உயிர்மெய் எழுத்து, ஆயுத எழுத்து, உயிரெளபடை, ஒற்றளபடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரகுறுக்கம், மகரகுறுக்கம், ஆயத குறுக்கம் என பத்து வகைகளாப் பிரிக்கலாம் என்று அறிந்தோம்.

அதைத் தவிர பேச்சின் கூறுகளாக (Parts of speech)

  1. பெயர்சொற்கள் (Nouns )
  2. பிரதிப் பெயர்சொற்கள் / சுட்டுப்பெயர்ச்சொற்கள் (Pronouns)
  3. வினைச்சொற்கள் (Verbs )

ஆகியவற்றைக் கற்றுள்ளோம்.  இந்த வகுப்பில்

  1. பெயரெச்சங்கள் / பெயருரிச்சொற்கள்  / பெயரடை (Adjectives)
  2. வினெயெச்சங்கள் / வினையுரிச்சொற்கள் / வினையடை (Adverbs)
  3. முன்னிடைச்சொற்கள் (Prepositions )
  4. இணைப்புச்சொற்கள் / இடைச்சொற்கள் (Conjunctions)
  5. வியப்பிடைச்சொற்கள் (Interjections)

ஆகியவற்றைப் பற்றிக் கற்க உள்ளோம். வினைச் சொற்களை விரிவாகவும், வினாச்சொற்கள், நிபந்தனைச் சொற்கள் ஆகியவற்றைக் கற்க உள்ளோம்.