20. சொற்களஞ்சியம்-II (ஒத்த ஒலிச் சொற்கள்)

தமிழ் மொழியின் மற்றுமொரு சிறப்பு அதில் உள்ள ஏராளமான ஒத்த ஒலிச் சொற்கள். இதானால் தமிழிலில் கவிதை எழுதுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மேடைப் பேச்சாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. இதனால் தானோ பாரதியார், தமிழின் ஓசையை “தேமதுரத் தமிழ் ஓசை” என்று கூறினாரோ? இன்றையப் பாடத்தில் நாம் சில ஒத்த ஒலிச்சொற்களைப் படிக்கலாம்.

இரட்டைக்கிளவி என்பது ஒரு வார்த்தை இரட்டையாக வந்து ஒரு பெயர்ச்சொல்லின் பண்பை விளக்க உதவும்.

இணைமொழிகளில் இரண்டு வார்த்தைகள் சேர்ந்து வந்து மொழிக்கு அழகு சேர்க்கும்.