10. பாருக்குள்ளே நல்ல நாடு

கீழே கொடுத்துள்ள பாடலை மனப்பாடம் செய்யவும்.

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

தீரத்திலே படை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.