02. ஓடி விளையாடு பாப்பா

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

 ஓடி விளையாடு பாப்பா -நீ
 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
 கூடி விளையாடு பாப்பா -ஒரு
 குழந்தையை வையாதே பாப்பா

 காலை எழுந்த உடன் படிப்பு
 பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
 மாலை முழுதும் விளையாட்டு
 என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

 பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
 புறஞ் சொல்லலாகாது பாப்பா
 தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
 தீங்குவர மாட்டாது பாப்பா

 ஓடி விளையாடு பாப்பா -நீ
 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
 கூடி விளையாடு பாப்பா -ஒரு
 குழந்தையை வையாதே பாப்பா
           - மகாகவி. சுப்பிரமணிய பாரதியார். 

மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

எழுதிப் பழகவும்.