20. அறுசுவைகள்

இன்று நாம சுவைகளைப் பற்றிப் படிக்கப் போறோம். மொத்தம் எத்தனை சுவையிருக்குன்னு தெரியுமா? ஆறு சுவைகள் இருக்கு.

இனிப்புச் சுவை (Sweet)

குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த சுவை என்ன தெரியுமா ? இனிப்பு. இனிப்பான பண்டங்கள் எதெல்லாம் இருக்கு தெரியுமா? லட்டு, ஜிலேபி, அல்வா, மைசூர்பாக்கு. மனதிற்கும் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. ஆனா அதிகமா சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல.

புளிப்புச் சுவை (Sour)

மாங்காய் எல்லாருக்கும் பிடிக்கும். அது என்ன சுவை என்று தெரியுமா? புளிப்பு. புளிப்பு சாப்பிட்டால் நல்லா பசிக்கும். புளிப்புச்சுவையில் என்னவெல்லாம் இருக்குன்னு தெரியுமா? எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent)

யாருக்காவது மிளகாயைச் சாப்பிடப் பிடிக்குமா? அது என்ன சுவை? காரம். ஆனா கொஞ்சமா காரம் சாப்பிடுவது நல்லது. எதெல்லாம் காரமானது? வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. இதை கார்ப்புச் சுவை என்றும் சொல்லுவார்கள்.

கசப்புச் சுவை (Bitter)

யாருக்குமே பிடிக்காத ஒரு சுவை என்ன தெரியுமா? கசப்பு. ஆனா, உடம்புக்கு ரொம்ப நல்லது செய்யக் கூடிய சுவை இது. கசப்பு சுவை எதிலெல்லாம் இருக்கு? பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் உள்ளது.

துவர்ப்புச் சுவை (Astringent)

நீங்க யாராவது பாக்கு சாப்பிட்டு இருக்கீங்களா? அது என்ன சுவை. துவர்ப்பு. எதெல்லாம் துவர்ப்புன்னு தெரியுமா? வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் எல்லாம் துவர்ப்பாக உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salt)

இந்தச் சுவைகளை எல்லாம் தனித்தனியாக சாப்பிட்டுவதை விட எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் அறுசுவையும் கலந்து ரொம்ப நல்லா இருக்கும்.

இந்தச் சுவைகளை எல்லாம் தனித்தனியாக சாப்பிட்டுவதை விட எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் அறுசுவையும் கலந்து ரொம்ப நல்லா இருக்கும்.

உப்பு யாராவது தனியாக சாப்பிடுவாங்களா? சாப்பிட்டு பார்தீங்கனா தெரியும். அது என்ன சுவை உவர்ப்பு. உப்பு சுவை கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களில் இருக்கு.