03. கை வீசம்மா கை வீசு

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

கை வீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கை வீசு
மிட்டாய் வாங்கலாம் கை வீசு
மெதுவாய்த் திங்கலாம் கை வீசு
சொக்காய் வாங்கலாம் கை வீசு
சொகுசாய்ப் போடலாம் கை வீசு
கோவிலுக்குப் போகலாம் கை வீசு
கும்பிட்டு வரலாம் கை வீசு 

உ, ஊ எழுதிப் பழகவும்.