இதுவரைக்கும் எண்களில் ஒன்றிலிருந்து
இருபது வரை சொல்வது, எப்படி எழுதுவது என்பதை நாம் ஏற்கனவே படித்துவிட்டோம். அதைத்
தவிர பத்து, இருபது என்று நூறு வரைக்கும் எப்படி எண்ணுவது என்பதும் படித்து
விட்டோம். பிறகு நூறு, இருநூறு என்று ஆயிரம் வரைக்கும் எப்படி எண்ணுவது என்பதையும்
படித்து விட்டோம்.
இன்று கோடி வரைக்கும் உள்ள எண்களை
எப்படிச் சொல்லுவது என்று படிப்போமா? நமக்கு எல்லாருக்கும் தெரியும் “ஒர் எண் வரும்
இடத்தைப் பொருத்து அதன் மதிப்பு மாறும்”. எனவே முதலில் தமிழில் எண்கள் வரும் இடத்தை எப்படிச் சொல்வது
என்று படிக்கலாம்.
இப்போது கோடி வரைக்கும் உள்ள எண்களை எப்படிச் சொல்வது என்று படிக்கலாம்.
இந்தப் பாடத்தின் பயிற்சியைச் செய்து தமிழில்
எல்லா எண்களையும் எப்படிச் சொல்வது என்று கற்றுக் கொள்க.
தமிழில் உள்ள ல, ள, ழ
என்ற மூன்று எழுத்து வரிசைகளை உபயோகிக்கும் போது கவனமாக உபயோகிக்க வேண்டும்.
தவறுதலாக எழுவதாலோ அல்லது உச்சரிப்பதாலோ நல்ல தமிழ் பேசுபவருக்கோ, அல்லது தமிழ்
மொழிக்கோ சிறப்பாகாது. இப்போது சில உதாரணங்களைப் பார்க்கலாம்.
அதேபோல் ர, ற உபயோகித்து சில உதாரணங்கள்.
அதேபோல் ண, ன உபயோகித்து சில உதாரணங்கள் பார்க்கலாம்.
எனவே நீங்கள் எழுதும் போதும் படிக்கும் போதும் கவனமாக செயல்படுவது
அவசியமாகிறது.
தமிழ் மொழியின் மற்றுமொரு சிறப்பு அதில் உள்ள ஏராளமான ஒத்த ஒலிச் சொற்கள். இதானால் தமிழிலில் கவிதை எழுதுபவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. மேடைப் பேச்சாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சி. இதனால் தானோ பாரதியார், தமிழின் ஓசையை “தேமதுரத் தமிழ் ஓசை” என்று கூறினாரோ? இன்றையப் பாடத்தில் நாம் சில ஒத்த ஒலிச்சொற்களைப் படிக்கலாம்.
இரட்டைக்கிளவி
என்பது ஒரு வார்த்தை இரட்டையாக வந்து ஒரு பெயர்ச்சொல்லின் பண்பை விளக்க உதவும்.
இணைமொழிகளில் இரண்டு
வார்த்தைகள் சேர்ந்து வந்து மொழிக்கு அழகு சேர்க்கும்.
இன்றைய பாடத்தில் நாம் சில
வார்த்தைகளைப் படிக்கப் போகிறோம். முதலில் மூன்று எழுத்து வார்த்தைகளைப்
படிக்கலாம். கிழே சில மூன்று எழுத்து வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இப்போது சில நான்கு எழுத்து வார்த்தைகளைப் படிக்கலாம். கிழே சில நான்கு எழுத்து வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இப்போது உங்களுக்கு தமிழ் வர்த்தைகளைப் படிக்கத்தெரியும். எல்லா எழுத்துக்களையும் படித்து முடித்ததனால் எழுதவும் தெரியும். இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக எழுதிப் பாருங்கள். இப்போது நாம் அடுத்த வடமொழி எழுத்தின் வரிசையைப் படிக்கலாம்.
இன்றைய பாடத்தில் நாம் சில வார்த்தைகளைப் படிக்கப் போகிறோம். முதலில் ஒர் எழுத்து வார்த்தைகளைப் படிக்கலாம். கிழே சில ஓர் எழுத்து வார்த்தைகள் கொடுக்கப் பட்டுள்ளன.
இங்கே கொடுக்கப் பட்டுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் ஒருமுறை சத்தமாக படித்துப் பார்க்கவும்.
அடுத்து இரண்டு எழுத்து வார்த்தைகள்
படிக்கலாமா? கிழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள இரண்டு எழுத்து
வார்த்தைகளைச் சத்தமாகப் படிக்கவும்.
இப்போது உங்களுக்கு தமிழ்
வர்த்தைகளைப் படிக்கத்தெரியும். எல்லா எழுத்துக்களையும் படித்து
முடித்ததனால் எழுதவும் தெரியும். இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக
எழுதிப் பாருங்கள்.
இப்போது
நம்ம அடுத்த வடமொழி எழுத்தின் வரிசையைப் படிக்கலாம்.
இன்று நாம சுவைகளைப் பற்றிப்
படிக்கப் போறோம். மொத்தம் எத்தனை சுவையிருக்குன்னு தெரியுமா? ஆறு சுவைகள் இருக்கு.
இனிப்புச் சுவை (Sweet)
குழந்தைகளுக்கு ரொம்பப் பிடித்த சுவை என்ன தெரியுமா ? இனிப்பு. இனிப்பான பண்டங்கள் எதெல்லாம் இருக்கு தெரியுமா? லட்டு, ஜிலேபி, அல்வா, மைசூர்பாக்கு. மனதிற்கும் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. ஆனா அதிகமா சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதல்ல.
புளிப்புச் சுவை (Sour)
மாங்காய் எல்லாருக்கும் பிடிக்கும். அது என்ன சுவை என்று தெரியுமா? புளிப்பு. புளிப்பு சாப்பிட்டால் நல்லா பசிக்கும். புளிப்புச்சுவையில் என்னவெல்லாம் இருக்குன்னு தெரியுமா? எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்பு சுவை அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent)
யாருக்காவது மிளகாயைச் சாப்பிடப் பிடிக்குமா? அது என்ன சுவை? காரம். ஆனா கொஞ்சமா காரம் சாப்பிடுவது நல்லது. எதெல்லாம் காரமானது? வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை உள்ளது. இதை கார்ப்புச் சுவை என்றும் சொல்லுவார்கள்.
கசப்புச் சுவை (Bitter)
யாருக்குமே பிடிக்காத ஒரு சுவை என்ன தெரியுமா? கசப்பு. ஆனா, உடம்புக்கு ரொம்ப நல்லது செய்யக் கூடிய சுவை இது. கசப்பு சுவை எதிலெல்லாம் இருக்கு? பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் உள்ளது.
துவர்ப்புச் சுவை (Astringent)
நீங்க யாராவது பாக்கு சாப்பிட்டு இருக்கீங்களா? அது என்ன சுவை. துவர்ப்பு. எதெல்லாம் துவர்ப்புன்னு தெரியுமா? வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் எல்லாம் துவர்ப்பாக உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt)
இந்தச் சுவைகளை எல்லாம் தனித்தனியாக சாப்பிட்டுவதை விட எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் அறுசுவையும் கலந்து ரொம்ப நல்லா இருக்கும்.
இந்தச் சுவைகளை எல்லாம் தனித்தனியாக சாப்பிட்டுவதை விட எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட்டால் அறுசுவையும் கலந்து ரொம்ப நல்லா இருக்கும்.
உப்பு யாராவது தனியாக சாப்பிடுவாங்களா? சாப்பிட்டு பார்தீங்கனா தெரியும். அது என்ன சுவை உவர்ப்பு. உப்பு சுவை கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களில் இருக்கு.