16. நல்லதோர் வீணை செய்தே

கீழே கொடுத்துள்ள பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்

தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியுணைப் பாடும்நல் அகங்கேட்டேன்
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

14. வானம் நமது தந்தை

 வானம் நமது தந்தை
 பூமி நமது அன்னை
 உலகம் நமது வீடு
 உயிர்கள் நமது உறவு   
                                        (வானம்)
 மலைகளிலே பிறப்பதற்கு 
 அருவி என்று பேரு-அது
 மண்ணில் வந்து தவழும் போது
 ஆறு என்று பேரு
  
 கொடிகளிலே பிறப்பதற்கு 
 மலர்கள் என்று பேரு
 மனித இனத்தில் பிறப்பதற்கு 
 குழந்தை என்று பேரு    
                                        (வானம்) 

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(ல…லௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

12. சின்ன சின்ன பாப்பா

 சின்ன சின்ன பாப்பா
 சிங்காரப் பாப்பா
 பூ வேணுமா – உனக்கு
 பூ வேணுமா?
  
 ஆழகான ரோஜா
 வெள்ளை நிற முல்லை
 காலை மலரும் தாமரை
 மணக்கும் பவழ மல்லிகை
  
 சின்ன சின்ன பாப்பா
 சிங்காரப் பாப்பா
 பூ வேணுமா – உனக்கு
 பூ வேணுமா? 

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(ய …யௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

10. பாருக்குள்ளே நல்ல நாடு

கீழே கொடுத்துள்ள பாடலை மனப்பாடம் செய்யவும்.

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

ஞானத்திலே பர மோனத்திலே-உயர்
மானத்திலே அன்ன தானத்திலே
கானத்திலே அமுதாக நிறைந்த
கவிதையிலே உயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

தீரத்திலே படை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்திலே உப காரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
தருவதிலே உயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.

08. காக்கைச் சிறகினிலே

காக்கை சிறகினிலே நந்தலாலா – நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா – நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா – நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா

– மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய் (த…தௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

எழுதிப் பழகுக.

06. பாடசாலை போகவேணும்-2

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்

பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு 
செல்வ பாப்பா எழுந்திரு
  
அழகு பையை நீயும் கையில் தூக்கிப் பார்த்து நடந்திடு 
செல்வ பாப்பா நடந்திடு
  
கற்று நாட்டை உயர்த்த நெஞ்சில் கருத்துக் கொள்ளாயா
அமுதே கருத்துக் கொள்ளாயா 
  
பள்ளிக்கூடம் கனியின் தோட்டம் கனிகள் வேண்டாமா 
இன்பக் கனிகள் வேண்டாமா
  
உன் கையை வீசி நடக்க நீயும் முந்த வேண்டாமா
கனியே முந்த வேண்டாமா 
  
பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு 
செல்வ பாப்பா எழுந்திரு 

உயிர்மெய் ( ட … டௌ) எழுத்துக்களைப் படிக்கவும்.

எழுதிப் பழகவும்:

04. பாடசாலை போகவேணும்-1

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.
 
பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு 
செல்வ பாப்பா எழுந்திரு
  
அழகு பையை நீயும் கையில் தூக்கிப் பார்த்து நடந்திடு 
செல்வ பாப்பா நடந்திடு
  
ஏடு நீக்கும் கல்விகற்க சிந்தையில்லையா 
கண்ணே சிந்தையில்லையா
  
நீ கெட்டிகாரனாக வேண்டும் விருப்பமில்லையா 
கண்ணே விருப்பமில்லையா
  
பாடசாலை போக வேண்டும் பாப்பா எழுந்திரு 
செல்வ பாப்பா எழுந்திரு 

எழுதிப் பழகவும்

02. ஓடி விளையாடு பாப்பா

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

 ஓடி விளையாடு பாப்பா -நீ
 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
 கூடி விளையாடு பாப்பா -ஒரு
 குழந்தையை வையாதே பாப்பா

 காலை எழுந்த உடன் படிப்பு
 பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
 மாலை முழுதும் விளையாட்டு
 என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

 பொய்சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
 புறஞ் சொல்லலாகாது பாப்பா
 தெய்வம் நமக்குத்துணை பாப்பா -ஒரு
 தீங்குவர மாட்டாது பாப்பா

 ஓடி விளையாடு பாப்பா -நீ
 ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
 கூடி விளையாடு பாப்பா -ஒரு
 குழந்தையை வையாதே பாப்பா
                      - மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்.  

மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

எழுதிப் பழகவும்.

01. ஒளி படைத்த கண்ணிணாய் வா வா

பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்

 ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
 உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா 
                                  (ஒளிபடைத்த) 
 களிபடைத்த மொழியினாய் வா வா வா 
 கடுமை கொண்ட தோளினாய் வா வா வா  
 தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா 
 சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா 
 எளிமைகண்டி ரங்குவாய் வா வா வா 
 ஏறுபோல நடையினாய் வா வா வா 
                                  (ஒளிபடைத்த)
 - மகாகவி. சுப்பிரமணிய பாரதியார்  

உயிரெழுத்துக்கள் – மீள்பார்வை

ஆயுத எழுத்து மீள்பார்வை:

மெய் எழுத்துக்கள் மீள்பார்வை:

15. புறாவும் எறும்பும் – எண்கள்

ஒரு எறும்பிற்கு தாங்க முடியாத தாகம். தண்ணீர் குடிக்க ஒரு நதிக்கு சென்றது. அது தண்ணீர் குடிக்கும் சமயத்தில் வெள்ளம் வந்து அதை அடித்துக்கொண்டு போயிற்று.

தண்ணீரில் மூழ்கும் தறுவாயில் இருந்த எறும்பை அருகாமையில் மரத்தின் மேல் உட்கார்ந்திருந்த புறா ஒன்று பார்த்தது. உடனே அது மரத்திலிருந்த ஒரு இலையை பறித்து எறும்புக்கு அருகே தண்ணீரில் போட்டது.

இலையின் மேல் எறும்பு மெதுவாக ஏறி கரையைச் சேர்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வேடன் ஒருவன் வந்து,  மரத்தின் மேல் அமர்ந்திருந்த புறாவைப் பிடிக்க எண்ணி, அதை நோக்கி வில்லில் அம்பைப் பொருத்தி
குறி பார்த்தான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த எறும்பு வேடனின் காலில் கடித்தது. அதனால் ஏற்பட்ட வலியில் வேடனின் குறி தப்பியது. புறாவும் அங்கிருந்து “சட்” என பறந்தோடி தப்பியது.

ஒருவர் நமக்கு செய்த உதவிக்காக அவரிடம் நன்றியுள்ளவனாக இருப்பதோடு, சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவருக்கு உதவவும் வேண்டும்.