ஆனந்தசந்திரிகை (Anandachandrikai)

ஆனந்தசந்திரிகை அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் மின்னணுப் பத்திரிக்கை (eMagazine). இது நமது இலவச இணையதளத் தமிழ்ப் பள்ளியின் செய்தி மலராகவும் செயல் படுகிறது.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகள் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் தமிழ்ப் படிக்கிறார்கள். அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரியின் பாட நெருக்கடிகளால் அவர்கள் தமிழ்ப் படிப்பைத்  தொடர்வது கடினமாகி விடுகிறது. அவ்வாறு தமிழ்க் கற்ற மாணவர்கள் தமிழுடன் உள்ள தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ள www.iLearntamilnow.com நடத்தும் தமிழ்ப் பத்திரிக்கை ஆனந்தசந்திரிகை. இது மாதம் இருமுறை வெளியிடப்படுகிறது. இது தமிழ் மொழி மட்டுமல்லாது, தமிழ்க் கலாச்சாரத்தையும் குழந்தைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக விளங்குகிறது. இதன் ஒரு பகுதியாகிய பாலசந்திரிகை தமிழ்ப் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக தயாரிக்கப்பட்டு வருகிறது.

உங்களுக்கு ஆனந்தசந்திரிகை இதழை மின்னஞ்சல் மூலமாகப் பெற விருப்பமா? உங்களுடைய முழுப்பெயரையும், மின்னஞ்சல் விலாசத்தையும் Register to be a Memberல் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

பாலசந்திரிகையின் முந்தைய இதழ்களை அதன் முகநூல் குழுமப் பக்கத்திலிருந்து (https://www.facebook.com/groups/Anandachandrikai/) தளவிறக்கம் செய்து படிக்கலாம் அல்லது நமது இலவச மின்நூலகத்திலிருந்தும் (eLibrary) படிக்கலாம்.