பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்

அணிலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டுவா பாதிப்பழம் உன்னிடம் மீதிப்பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் திங்கலாம்

எழுதிப் பழகுக:




பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்

அணிலே அணிலே ஓடி வா அழகிய அணிலே ஓடி வா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டுவா பாதிப்பழம் உன்னிடம் மீதிப்பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் திங்கலாம்

எழுதிப் பழகுக:




பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும். மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் அல்வா போன்ற மாம்பழம் உங்களுக்கு வேணுமா? இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டுத் தின்னலாம் பங்கு போட்டுத் தின்னலாம்

எழுதிப் பழகுக:


பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்
தோசையம்மா தோசை அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்த மாவும் கலந்து சுட்ட தோசை அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூணு அண்ணனுக்கு ரெண்டு பாப்பாவுக்கு ஒண்ணு தின்னத் தின்ன ஆசை திருப்பிக் கேட்டா பூசை கொடுக்க கொடுக்க ஆசை எடுக்கப் போன பூசை.

எழுதிப் பழகவும்


பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.

கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய்த் திங்கலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம் கை வீசு சொகுசாய்ப் போடலாம் கை வீசு கோவிலுக்குப் போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு
உ, ஊ எழுதிப் பழகவும்.


பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.
நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஒடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப் பூ கொண்டு வா பட்டம் போலப் பறந்து வா பம்பரம் போல் சுற்றி வா.
இ, ஈ எழுதிப் பழகவும்.


பாடலைக் கேட்டு மனப்பாடம் செய்யவும்.
அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டு உன்னைப் போன்ற நல்லாள் ஊரில் யாவர் உள்ளார் என்னால் உனக்குத் தொல்லை ஏதும் இங்கே இல்லை ஐயம் இன்றிச் சொல்வேன் ஒற்றுமை என்றும் பலமாம் ஓதும் செயலே நலமாம் ஒளவை சொன்ன மொழியாம் அஃதே எனக்கு வழியாம்.
அ, ஆ – எழுதிப் பழகவும்.

